ADDED : ஏப் 18, 2025 06:43 AM
அ நிறம் | அளவு
கோவை; தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோவை மாவட்ட கிளை சார்பில், வாழ்வூதியம் கோரும் பேரணி நேற்று நடந்தது.
பேரணியில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் வழங்க கோரிக்கை விடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பிலால் மக்துாம் தலைமை வகித்து பேசுகையில், ''பல ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் இன்னும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மட்டுமே பெற்று வருகின்றனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கோவை மகளிர் பாலிடெக்னிக்கில் துவங்கிய பேரணி டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை நடந்தது.
