ADDED : ஆக 21, 2026 02:00 PM
அ நிறம் | அளவு
கோவை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. கோவை ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
