/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர் சங்கம் பிரசாரம்
/
கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர் சங்கம் பிரசாரம்
ADDED : நவ 25, 2025 05:52 AM
கவுண்டம்பாளையம்: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நான்கு நாட்கள் பிரசாரம் துவங்கியது
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில், நான்கு நாட்கள் நடக்கும் இந்த வாகன பிரசாரம், கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, வட்டக்கிளை தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.,செவிலியர்கள், உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை தொகுப்பூதியம் வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் சாலைப் பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வாகன பிரசாரம் நடக்கிறது.

