/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தக்கூடாது அரசு மருத்துவமனை டாக்டர் விளக்கம்
/
நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தக்கூடாது அரசு மருத்துவமனை டாக்டர் விளக்கம்
நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தக்கூடாது அரசு மருத்துவமனை டாக்டர் விளக்கம்
நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தக்கூடாது அரசு மருத்துவமனை டாக்டர் விளக்கம்
ADDED : ஏப் 23, 2025 10:57 PM
மேட்டுப்பாளையம், ; 'வெயில் காலத்தில் தொடர்ந்து ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும்,' என அரசு மருத்துவமனை டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
கோடை வெயில் அதிகளவில் அடிப்பதால், பொதுமக்கள் வெளியே நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாதவர்கள், தர்பூசணி, கம்மங்கூழ், மோர் ஆகியவற்றை குடித்து வருகின்றனர். வெயில் காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து, காரமடை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் சுதாகர் கூறியதாவது:
வெயில் காலத்தில் உடல் வேர்க்குர், வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் காலை, 11:00 மணியிலிருந்து, மாலை, 4:00 மணி வரை வெளியே வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை கதர் ஆடைகளை பயன்படுத்த வேண்டும். கருப்பு ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வெயில் காலத்தில் தொடர்ந்து ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் வெயிலில் விளையாடினால், அவர்களுக்கு நீர் சத்து குறையும். எனவே அவர்கள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.இளநீர், மோர், கம்மங்கூழ் ஆகியவற்றை குடிக்க வேண்டும். தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரித்த பானங்களை, ஐஸ் சேர்க்காமல் குடிக்க வேண்டும். பாட்டலில் அடைத்து பிரீசரில் வைத்த, குளிர்ச்சியான எந்த பானங்களையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
இந்த வெயில் காலத்தில் தான், கண் நோயான 'மெட்ராஸ் ஐ' வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இது ஒரு தொற்று என்பதால், அதிக அளவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு நேரம் குளிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி, இருமல் இருந்தால், மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களின் பரிந்துரைப்படி, மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இவ்வாறு டாக்டர் சுதாகர் கூறினார்.

