/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பள பணத்தில் இஷ்டத்துக்கு பிடிப்பதா; அரசு மருத்துவமனை ஊழியர்கள் புகார்
/
சம்பள பணத்தில் இஷ்டத்துக்கு பிடிப்பதா; அரசு மருத்துவமனை ஊழியர்கள் புகார்
சம்பள பணத்தில் இஷ்டத்துக்கு பிடிப்பதா; அரசு மருத்துவமனை ஊழியர்கள் புகார்
சம்பள பணத்தில் இஷ்டத்துக்கு பிடிப்பதா; அரசு மருத்துவமனை ஊழியர்கள் புகார்
ADDED : ஜூலை 15, 2025 08:52 PM
கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களின், ஜூன் மாதத்திற்கான ஊதியத்தில், அறிவிப்பு இன்றி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் கிரிஸ்டல் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்பாளர்கள், செக்யூரிட்டி, அடிப்படை மற்றும் துாய்மை உட்பட 450 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள் நியமனம் மற்றும் ஊதிய வினியோகம் சார்ந்த பொறுப்பு தனியார் நிறுவனத்தை சார்ந்தது.
பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும், சரியான தேதியில் ஊதியம் விடுவிக்கப்படுவதில்லை. இந்நிலையில், ஊதியத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிரிஸ்டல் நிறுவன பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'மாதந்தோறும் ஒரு தேதி நிர்ணயம் செய்து ஊதியம் வழங்க பல முறை கேட்டும் நடைமுறைப்படுத்தவில்லை. ஊதியத்தை நம்பி வங்கிக்கடன் கூட வாங்கமுடியாத நிலையில் உள்ளோம்.
ஜூன் ஊதியத்தில் அனைவருக்கும் 2000 முதல் 9000 ரூபாய் வரை பிடித்தம் செய்துள்ளனர். இதுகுறித்து கேட்டால், தெளிவான பதில் கூறவில்லை.
பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். சம்பளம் வழங்க சரியான தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, 'கிரிஸ்டல் நிறுவன ஊழியர்களின் வருகைபதிவேடு கொடுப்பது மட்டுமே எங்கள் பொறுப்பு. பிற அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சார்ந்தது. மாநில அளவில் உள்ளதால், அரசு தான் தீர்வு காணமுடியும்' என்றனர்.