/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை ஊழியர்கள் குறைகளை சொல்ல நேரம் ஒதுக்கீடு
/
அரசு மருத்துவமனை ஊழியர்கள் குறைகளை சொல்ல நேரம் ஒதுக்கீடு
அரசு மருத்துவமனை ஊழியர்கள் குறைகளை சொல்ல நேரம் ஒதுக்கீடு
அரசு மருத்துவமனை ஊழியர்கள் குறைகளை சொல்ல நேரம் ஒதுக்கீடு
ADDED : அக் 30, 2025 12:20 AM
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், கிறிஸ்டல் நிறுவனத்தை சேர்ந்த 510 பேர், ஒப்பந்த முறையில், துாய்மை பணி, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். துாய்மை பணிகள், நோயாளிகளுக்கு உதவி, உதவியாளர்கள், மேற்பார்வை, ஐ.சி.யு., செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இவர்கள் பணிபுரிகின்றனர்.
ஊதியம் குறைப்பு, பணி நேரம் மாற்றம், பி.எப். பணம் எடுப்பதில் சிக்கல் என பல்வேறு குறைபாடுகள் சார்ந்த புகார்களை சில மாதங்களாக முன்வைத்து வருகின்றனர். பணி நேரம் மாற்றுவது உள்ளிட்ட குறைபாடுகளை நேற்று பணியாளர்கள் க லெக்டர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர்.
ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியாவிடம் கேட்ட போது, ''பணிநேரம் இதுவரை மாற்றப்படவில்லை. சுழற்சி முறையில் பணியாளர்கள் வரும் நேரம், செல்லும் நேரத்தில் சிறு குழப்பங்கள் இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. பணியாளர்களுக்கு சிரமங்கள் வராமல் மாற்றுவதற்கு ஆலோசித்து வருகிறோம். அலுவலர்களுக்காக பிரத்யேக குறைகேட்பு நேரம் மதியம் 2 - 3 வரை ஒதுக்கப்பட்டது. யாரும் குறைகளை தெரிவிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தயக்கமின்றி குறைபாடுகளை தெரிவிக்கலாம்,'' என்றார்.

