/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் சேர்க்கையை அதிகரித்த 13 அரசு பள்ளிகளுக்கு அரசு பாராட்டு
/
மாணவர் சேர்க்கையை அதிகரித்த 13 அரசு பள்ளிகளுக்கு அரசு பாராட்டு
மாணவர் சேர்க்கையை அதிகரித்த 13 அரசு பள்ளிகளுக்கு அரசு பாராட்டு
மாணவர் சேர்க்கையை அதிகரித்த 13 அரசு பள்ளிகளுக்கு அரசு பாராட்டு
ADDED : அக் 07, 2025 11:31 PM
கோவை; கோவை அரசு பள்ளிகளில், கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் (2025---2026) மாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 184 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கோவை மாவட்டத்தில் 13 பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மரக்கடை நஞ்சப்ப கவுடர் வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 70, ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 76, வெங்கிட்டாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 63, ரத்தினபுரிமாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 89, ஷாஜஹான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- 52, காளப்பட்டிமாநகராட்சி ஆரம்பப்பள்ளி- 67, காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 76, அன்னுார் அமரர் ஏ.முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி 120, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி 57, கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 53, அரசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 52, ஆர்.எஸ்.புரம் மாதிரி மேல்நிலைப்பள்ளி 89, அரசூர் அரசு மேல் நிலைப்பள்ளி 50 ஆகிய பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் அதிக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.