தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : ஏப் 09, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்,; குப்பேபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நுாற்றாண்டு விழா நடந்தது.

குப்பேபாளையத்தில், கடந்த 1925ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கியது. இப்பள்ளி துவக்கப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, நூற்றாண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசுகையில், ''இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் அரசு பதவிகளிலும், ஆசிரியர்களாகவும் உள்ளனர். பலர் இப்பள்ளிக்கு உதவ உறுதி அளித்துள்ளனர்,'' என்றார்.

வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ சுதா, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மேற்பார்வையாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள், சாதித்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். வி.பி.எஸ். நாதன் பவுண்டேஷன் சார்பில் அனைத்து மாணவ மாணவியருக்கும் புத்தக பை மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஹரி மோகன் குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us