/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துவக்கப்பள்ளி மேற்கூரை சேதம்
/
அரசு துவக்கப்பள்ளி மேற்கூரை சேதம்
ADDED : மே 21, 2025 11:18 PM
அன்னுார் : குன்னத்தூராம்பாளையம் துவக்கப்பள்ளியில் சேதம் அடைந்த மேற்கூரையை சரி செய்ய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னுார் பேரூராட்சியில், குன்னத்தூராம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 60 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்த போது காற்று சுழன்று அடித்தது. இதில் பள்ளி முன்புறம் மேற்கூரை சீட்டுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'இன்னும் பத்து நாட்களில் பள்ளி துவங்க உள்ளது. மேற்கூரை சேதமடைந்ததால் மழை நீர் பள்ளி வளாகத்திற்குள் இறங்குகிறது.
இதனால் தரைத்தளம் சேதமாகும். எனவே, அதிகாரிகள் விரைவில் மேற்கூரையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.