/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்! அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுரை
/
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்! அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுரை
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்! அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுரை
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்! அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுரை
ADDED : ஆக 10, 2025 10:15 PM

பொள்ளாச்சி; ''அரசின் திட்டங்கள், விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அதிகாரிகளிடம் உள்ளது. முகாம்களில் அதிகளவு பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, பொள்ளாச்சி எம்.பி., அறிவுறுத்தினார்.
வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு குறித்து சிறப்பு முகாம், பொள்ளாச்சி மீன்கரை ரோடு தமிழ்மணி நகரில் நடந்தது.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்து முகாமினை துவக்கிவைத்து பேசுகையில், 'விவசாயிகளுக்கு அரசின் மானிய திட்டங்கள், புதிய இயந்திரங்கள் உள்ளிட்டவை முறையாக சென்றடைய வேண்டும். அரசு திட்டங்களை அறிவித்தாலும், அதை செயல்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு அதிகாரிகளிடம் உள்ளது.
இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இதுபோன்று விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் போது உரிய தகவல்களை தெரிவித்து அதிகளவு விவசாயிகள் பயன்பெற வைக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பவர்டில்லர் வழங்கினார். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன.
டிராக்டர்கள், பவர்டில்லர், பவர் வீடர், களை எடுக்கும் கருவி, தேங்காய் உரிக்கும் இயந்திரம், சோலார் பம்ப், டிரோன் போன்ற நவீன இயந்திரங்கள், விவசாயிகள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை பராமரித்தல், பழுதுகளை கண்டறிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வேளாண் பல்கலை பண்ணை இயந்திரங்கள், பொறியியல் துறையின் வாயிலாக மஞ்சள், காய்கறி நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பேபி மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனந்தகுமார், வேளாண் பல்கலை பண்ணை இயந்திரமயமாக்கல் துறை தலைவர் கவிதா, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

