/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 08, 2025 11:25 PM
அன்னுார்; அன்னுார் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2000 முதல் 2002ம் ஆண்டு வரை பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி படித்த 47 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சந்திக்க முடிவு செய்தனர். பள்ளி வளாகத்தில் 35 பேர் சந்தித்துக் கொண்டனர்.
தங்களுக்கு கற்பித்த முன்னாள் தலைமையாசிரியர் திருமூர்த்தி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சிவசாமி ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்களை கவுரவித்தனர். முன்னாள் மாணவர்களில் ஒருவரான குன்னத்துாரை சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் தனது ராணுவப் பணி அனுபவத்தை தெரிவித்தார். முன்னாள் மாணவர்களில் மூன்று அரசு பள்ளி ஆசிரியைகள் கற்பித்தல் குறித்து தெரிவித்தனர். பலரும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு உபகரணம் வழங்க முடிவு செய்தனர்.