/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி நர்சிங் மாணவியருக்கு மருத்துவமனையில் அகப்பயிற்சி
/
அரசு பள்ளி நர்சிங் மாணவியருக்கு மருத்துவமனையில் அகப்பயிற்சி
அரசு பள்ளி நர்சிங் மாணவியருக்கு மருத்துவமனையில் அகப்பயிற்சி
அரசு பள்ளி நர்சிங் மாணவியருக்கு மருத்துவமனையில் அகப்பயிற்சி
ADDED : செப் 22, 2025 10:12 PM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, நர்சிங் தொழிற் பயிற்சி பெற மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நர்சிங் தொழிற் கல்வி கடந்தாண்டு துவங்கப்பட்டது. நடப்பாண்டு பிளஸ்2 நர்சிங் தொழிற்கல்வி பயிலும் மாணவியருக்கு, அக். 6ம் தேதி முதல், 14ம் தேதி வரை, மருத்துவமனைக்கு அகப்பயிற்சி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அகப்பயிற்சி குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம், விரிவான விளக்கம், வழிகாட்டுதல்கள் இன்று வழங்கப்பட்டன.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் தர்மு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி வரவேற்றார்.
முதுகலை ஆசிரியர் சிவக்குமார், நர்சிங் அகப்பயிற்சியின் முக்கியத்துவம், மருத்துவமனை பயிற்சிக்கு மாணவியர் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாணவியருக்கும், பெற்றோருக்கும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'நர்சிங் பிரிவு மாணவியர், அகப்பயிற்சியின் போது தங்களின் படிப்பு தொடர்பான தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது,' என்றனர்.