/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடின உழைப்பும், ஸ்மார்ட் ஒர்க்கும் இருந்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி தேர்வான அரசுப்பள்ளி மாணவி கூறுகிறார்

ADDED : அக் 27, 2025 11:24 PM

கோவை: 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவி ஹேமாவுக்கு, அப்பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ் வழிக் கல்வியில் பயின்று, தமிழிலேயே நீட் தேர்வு எழுதிய ஹேமா, தனது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'எங்கள் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 25 வருட வரலாற்றில், மருத்துவப் படிப்பில் சேரும் முதல் மாணவி ஹேமாதான். அவருடைய சாதனை, மற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக உள்ளது. தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், மருத்துவப் படிப்பு சேர்க்கை மற்றும் நீட் தேர்வுக்கு தயாராவது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்' என்றனர்.
மாணவி ஹேமா கூறுகையில், “என் அப்பா எலக்ட்ரீசியன்; அம்மா டெய்லர். நாங்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர் ஆக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.
''நீட் தேர்வுக்காக தொடர்ந்து படித்தேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பாடங்களை, 'ரெபர்' செய்து படித்தேன். கடின உழைப்பும், அதே நேரத்தில் ஸ்மார்ட் ஒர்க்கும் இருந்தால் கடினமான தேர்வுகளிலும், எளிதில் வெற்றி பெற முடியும்,” என்றார்.