தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்


ADDED : செப் 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பகவதிபாளையம் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பகவதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாமில் ஈடுபட்டுள்ளனர்.

முகாமானது, 26 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை (7 நாட்கள்) நடக்கிறது. முதல் நாளில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, திட்ட அலுவலர் பங்காரு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போதைப் பொருள் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரிடர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, எழுத்தறிவு விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல், முதலுதவியின் அவசியம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், முகாமில் ஒவ்வொரு நாளாக நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us