குறுமயை அளவிலான போட்டி: ஜே.கிருஷ்ணாபுரம் பள்ளி அசத்தல்
குறுமயை அளவிலான போட்டி: ஜே.கிருஷ்ணாபுரம் பள்ளி அசத்தல்
UPDATED : செப் 27, 2026 04:57 PM
ADDED : செப் 27, 2026 04:31 PM
பொள்ளாச்சி: குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியில், ஜே.கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில், பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மற்றும் சரஸ்வதி தியாகராஜா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்றன.
இதில், ஜே.கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்று வெற்றி பெற்றனர். கேரம் போட்டியில், மாணவர் அன்பரசு இரண்டாமிடமும், சிலம்பத்தில் மாணவி புவிஷா முதலிடமும், மாணவி கவிஷாஸ்ரீ இரண்டாமிடமும்; மாணவர் யஷ்வந்த் இரண்டாமிடமும் பெற்றனர்.
தடகள போட்டியில் மாணவர் சூர்யகுமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும்; மாணவர் கவியரசு, நீளம் தாண்டுதலில் இண்டாமிடமும் பெற்றனர்.
மாணவி கோமதி நீளம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடமும்; மாணவி வைஷ்ணவி, 14வயதுக்குட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மதுஸ்ரீ, ஆதிரா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.
இதில், முதல் இரண்டு இடம் பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். குழு போட்டிகளில் கோகோவில், 19 வயது, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர்.
மாணவர்கள் பிரிவில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமையாசிரியர் நீலவேணி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
