/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 03, 2025 07:37 AM

மேட்டுப்பாளையம்: வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான தேர்வு அக்டோபர் மாதத்தில் நடந்தது. இதில் காரமடை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இப்பள்ளி மாணவியர் கவுசல்யா மற்றும் இவாஞ்சலின், மாணவர்கள் கோகுல் மற்றும் விஷ்ணு வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பேபி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.--