/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் ஓவிய போட்டிகள்
/
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் ஓவிய போட்டிகள்
ADDED : டிச 03, 2025 07:36 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை விழாவை ஒட்டி மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடந்தன.
போட்டிகள் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஒரு பிரிவாகவும், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள் மற்றும் சர்வதேச பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும், வித்யாலய பள்ளிகள் ஒரு பிரிவாகவும் என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
வகுப்பு வாரியாக, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய மாணவ மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு, 51 கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம், 648 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் 99 அறிவு சார் குறைபாடு உடைய மாணவ, மாணவியர் என, மொத்தம், 747 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சுவாமி கரிஷ்டானந்தா தலைமை வகித்தார். போட்டிகள் இரண்டு மணி நேரம் நடந்தது. கோவை மாவட்ட ஓவிய ஆசிரியர் நடுவர் குழு, பிரிவு வாரியாக மிகச் சிறப்பாக வரைந்த முதல் மூன்று மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து வெற்றியாளர்களாக அறிவித்தது.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரையும் ஊக்குவிக்கும் பொருட்டு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருபூஜை நாளான ஜன., 4ம் தேதி குருபூஜை விழா மேடையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

