/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் களப் பயணம்
/
அரசு பள்ளி மாணவர்கள் களப் பயணம்
ADDED : அக் 17, 2025 11:31 PM
அன்னுார்: 'பயிர் கழிவுகளை பயன்படுத்தி எளிதில் இயற்கை உரம் தயாரிக்கலாம்,' என, களப் பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களை களப் பயணம் அழைத்துச் செல்லும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, அன்னுார், சொக்கம்பாளையம், கெம்ப நாயக்கன்பாளையம் மற்றும் ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவியர் களப் பயணமாக சூலூர், செஞ்சோலை, இயற்கை வழி வேளாண் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இயற்கை விவசாயி செந்தில் குமரன் பேசுகையில், சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
பயிர் கழிவுகளை பயன்படுத்தி எளிதில் இயற்கை உரம் தயாரிக்கலாம். இயற்கை உரங்களை பயன்படுத்துவதால், மண் மற்றும் நீர் மாசுபாடு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படுகிறது, என்றார்.
இதில் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொழில்நுட்ப மேலாளர் லோக நாயகி வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டய படிப்புகள் மற்றும் அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு நன்றி தெரிவித்தார்.