/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மினி ஹேண்ட் பால் அணிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
/
மினி ஹேண்ட் பால் அணிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
ADDED : செப் 15, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், 17வது மினி ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 26 முதல் 29 வரை நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் விளையாட, கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, 7ம் வகுப்பு மாணவர் மிகுன்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.