sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளையாட்டில் சளைக்காத அரசுப் பள்ளி மாணவர்கள்; முக்கியத்துவம் அளித்தால் பிரகாசமாகும் எதிர்காலம்

/

விளையாட்டில் சளைக்காத அரசுப் பள்ளி மாணவர்கள்; முக்கியத்துவம் அளித்தால் பிரகாசமாகும் எதிர்காலம்

விளையாட்டில் சளைக்காத அரசுப் பள்ளி மாணவர்கள்; முக்கியத்துவம் அளித்தால் பிரகாசமாகும் எதிர்காலம்

விளையாட்டில் சளைக்காத அரசுப் பள்ளி மாணவர்கள்; முக்கியத்துவம் அளித்தால் பிரகாசமாகும் எதிர்காலம்


ADDED : டிச 18, 2024 12:17 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தடகளம் போன்ற போட்டிகளில், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாகும்.

கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், 1,387 பள்ளிகள், 660க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 148 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு, மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், கட்டமைப்பு வசதிகளுக்காக விளையாட்டு மைதானங்கள் பரப்பளவும் குறைந்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் கபடி, கால்பந்து, சிலம்பம் என சில விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்ப, வசதிகள் இல்லாததும் ஒருவிதத்தில் காரணம். இதனால், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து போட்டிகளிலும், கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பொருளாதாரமே தடை


விளையாட்டு சங்கத்தினர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீரர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். தடகளம், பேட்மின்டன், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள், அதிக கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் கபடி, கால்பந்து, சிலம்பம் என சில போட்டிக்கு மட்டுமே செல்கின்றனர். இவர்களுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகளை, பள்ளிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும்.

திறமை விஷயத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சளைத்தவர்கள் அல்ல. பொருளாதாரம் மட்டுமே தடை. எனவே, அரசு, மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

விளையாட்டு வாயிலாக, ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் அதிக இடமும் பெற முடியும்; விளையாட்டில் தொடர்ந்து சாதிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'ஷூ' கூட கிடையாது!

குறுமையம், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அரசு, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் ஷூ வாங்கக்கூட, பணம் இல்லாமல் வெறும் காலில் ஓடி வெற்றி பெற்றும் உள்ளனர். எனவே, அரசுப் பள்ளிகளுக்கு போட்டி சமயங்களில் சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரண வசதிகளும் வழங்க, அரசு முன்வர வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.








      Dinamalar
      Follow us