/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
/
அன்னுாரில் அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 04:15 AM
அன்னுார் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அன்னுார் வட்டாரத்தில், நான்கு அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 83 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் நித்திலா 477 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
பொன்னேகவுண்டன் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 21 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இப்பள்ளியில் மாணவி சக்தி 484 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பசூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி கனிஷ்கா 458 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
அரசு உதவி பெறும் அன்னுார் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 115 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் நிரஞ்சன வள்ளி 483 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.