/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு சீருடை பணியாளர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு சீருடை பணியாளர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2025 09:17 PM

பொள்ளாச்சி; தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கம் சார்பில், பொள்ளாச்சி போக்குவரத்து பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், நிறுத்திய மகளிருக்கான இலவச பயண பஸ்களை உடனடியாக வழித்தடத்தில் இயக்க வேண்டும் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சங்க பொதுச்செயலாளர் கூறியதாவது:
தமிழக அரசின் மகளிர் இலவச பயண பஸ், பல மாவட்டங்களில் வருவாய் இல்லை என நிறுத்தியுள்ளனர். பஸ்களில், ஆண்களை மட்டுமே ஏற்றவும், பெண்களை ஏற்ற வேண்டாம் என கிளை மேலாளர்கள் வாய்மொழியாக உத்தரவிடுகின்றனர்.
இது முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும். வசூல் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். கிளை மேலாளர்கள் முதல்வர் பெயரை கெடுக்கும் வகையில், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு, 7 - 8 மணி நேரம் பணி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, 9 - 10 மணி நேரம் பணி வழங்குகின்றனர். ஒப்பந்த முறை பணியாளர்களுக்கு பேட்டா வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.