தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரு போட்டிகளிலும் அசத்திய அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி

இரு போட்டிகளிலும் அசத்திய அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி

இரு போட்டிகளிலும் அசத்திய அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி


ADDED : பிப் 14, 2025 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; ஐ.பி.ஏ.ஏ., பேட்மின்டன் மற்றும் பால் பேட்மின்டன் போட்டியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேசன் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி'(ஐ.பி.ஏ. ஏ.,) பால் பேட்மின்டன் மற்றும் பேட்மின்டன் போட்டிகள் நடந்தது.

கோவை டிவிஷன் அளவில் பெண்களுக்கான இப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன. பேட்மின்டன் போட்டியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. பால் பேட்மின்டன் இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியை வென்று முதலிடம் பிடித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் டிராபி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us