/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய கலை போட்டியில் அரசு பள்ளி அசத்தல்
/
குறுமைய கலை போட்டியில் அரசு பள்ளி அசத்தல்
ADDED : நவ 11, 2024 06:57 AM

சூலுார் : சூலுார் குறுமைய அளவில் நடந்த கலை விழா போட்டிகளில், அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் வெற்றிகளை குவித்து அசத்தி உள்ளனர்.
சூலுார் அடுத்த அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் சூலுார் குறுமைய அளவிலான கலை விழா போட்டிகளில் பங்கேற்றனர். பேச்சு போட்டியில், மேகாவும், ஆத்திச்சூடி பாடல் ஒப்புவித்தலில் சஷ்டிகாவும், ஆங்கில ஒப்புவித்தலில் சஷ்காவும் முதல் பரிசு பெற்றனர்.மாறுவேட போட்டியில் யஷ்வந்தும், மெல்லிசை பாடலில் ஹரீஷ், திருக்குறள் ஒப்புவித்தலில் அக்ஷயா, கதை கூறுதலில் கிருத்திக் மூன்றாம் இடம் பெற்றனர். மேலும், பரத நாட்டியம், குழு நடனத்தில் மாணவ, மாணவியர் மூன்றாம் இடம் பெற்றனர். ஒன்றிய அளவில் நடந்த பேச்சு போட்டியில், மேகாவும், ஆங்கில ஒப்புவித்தலில் சஷ்டிகாவும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர். பரிசுகளை வென்ற மாணவ, மாணவியரை தலைமையாசிரியை புஷ்பலதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினர்.