/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜே.இ.இ., நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
/
ஜே.இ.இ., நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
ஜே.இ.இ., நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
ஜே.இ.இ., நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
ADDED : பிப் 16, 2024 11:20 PM
மேட்டுப்பாளையம்:மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதன்மை தேர்வு, ஜன., 24ம் தேதியிலிருந்து, பிப்., 1ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ. மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
காரமடை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த விஷ்மிதா, 74 மதிப்பெண்களும், கவினா, 64 மதிப்பெண்களும் பெற்று, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.