/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் திறனாய்வு தேர்வில் தேர்வு
/
அரசு பள்ளி மாணவர்கள் திறனாய்வு தேர்வில் தேர்வு
ADDED : நவ 07, 2024 08:28 PM

மேட்டுப்பாளையம்; தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை கிடைக்கும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.
காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதில் 11ம் வகுப்பை சார்ந்த ஜான்சி ராணி மற்றும் சுபாஷ் ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும்.
இம்மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பேபி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

