/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.,கட்டாயம்; பொருத்தாத வாகனங்களுக்கு நடைசீட்டு இல்லை
/
கனிமவள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.,கட்டாயம்; பொருத்தாத வாகனங்களுக்கு நடைசீட்டு இல்லை
கனிமவள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.,கட்டாயம்; பொருத்தாத வாகனங்களுக்கு நடைசீட்டு இல்லை
கனிமவள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.,கட்டாயம்; பொருத்தாத வாகனங்களுக்கு நடைசீட்டு இல்லை
ADDED : ஜூலை 01, 2025 10:48 PM
கோவை; கல் குவாரிகள் மற்றும் கனிமவள கிடங்கு நடத்துபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி பேசியதாவது:
கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், கல்குவாரிகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்குள் பயன்படுத்தும் வாகனங்களிலும், ஜி.பி.எஸ். கருவி வரும் ஆக., முதல் தேதிக்குள் பொருத்தியிருக்க வேண்டும்.
பொருத்தாத வாகனங்களுக்கு போக்குவரத்து நடைசீட்டு மற்றும் மாற்று நடைச்சீட்டு ஆகியவை இணைய வழியில் எடுக்க முடியாது.
ஒவ்வொரு குவாரிகள், கிரஷர்கள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்கு வாயில்களில், எடை மேடை கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
புதியதாக குவாரி குத்தகை உரிமம் மற்றும் கனிம சலுகைகள் பெற விரும்புபவர்கள், MIMAS Portal (http://mimas.tn.gov.in/dist/auth/register) என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தடையின்மை சான்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை, கட்டயமாக கடைபிடிக்க வேண்டும். தவறினால் கனிம சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாநில கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னசாமி, இணை செயலாளர் நந்தகுமார் மற்றும் கோவை மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.