/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிராப்ஸ்' ஆண்டு விழா இசையுடன் குதுாகலம்
/
'கிராப்ஸ்' ஆண்டு விழா இசையுடன் குதுாகலம்
ADDED : ஜன 29, 2025 11:30 PM

கோவை; கோவையை மையமாகக் கொண்ட கிராப்ஸ்(CROPS) சமூக சேவை அமைப்பின், 32வது ஆண்டு விழா டி.இ.எல்.சி., சர்ச் பாரிஷ் ஹாலில் நடந்தது.
இதில், கோயம்புத்துார் சேம்பர் கொரேல் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. கோயம்புத்துார் சேம்பர் கொரேலின் நிறுவனர் மற்றும் கலை இயக்குனர் பேய்த் ராக்லாந்த் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து, தங்களின் இனிமையான குரலால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிகழ்வில், கிராப்ஸ் அமைப்பின் நிறுவனர் தாமஸ் பேசுகையில், ''இசை எங்களது மகிழ்ச்சிக்கும், ஊக்கத்திற்கும் ஒரு உறுதுணையாக இருந்தது. இந்த விழா எங்கள் குழுவின் கூட்டு முயற்சிகளையும், சாதனைகளையும் கொண்டாடுகிறது,” என்றார்.

