/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வேளாண் பல்கலை.,யில் நாளை 'முதல் பட்டதாரிகள்' சங்கமம்
/
கோவை வேளாண் பல்கலை.,யில் நாளை 'முதல் பட்டதாரிகள்' சங்கமம்
கோவை வேளாண் பல்கலை.,யில் நாளை 'முதல் பட்டதாரிகள்' சங்கமம்
கோவை வேளாண் பல்கலை.,யில் நாளை 'முதல் பட்டதாரிகள்' சங்கமம்
ADDED : பிப் 20, 2026 06:40 AM

கோவை: தமிழ்நாடு வேளாண் மை பல்கலைக்கழகத்தின் 'முதல் பட்டதாரிகள்' சங்கமம் நாளை(21ம் தேதி) நடக்கிறது.
இந்தியாவிலேயே 120 ஆண்டுகளை கடந்த பழமையான கல்லுாரி கோவை வேளாண் கல்லுாரியாகும். இக்கல்லுாரி 1971ம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு, 1971 செப்டம்பர் 26ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பல்கலையில் படித்து, பிஎஸ்சி முதல் வேளாண்மை பட்டம் பெற்ற பட்டதாரிகள் சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நாளை(21ம் தேதி) கோவை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. முதல் பட்டம் பெற்ற 156 நபர்களில், பலர் தமிழக அரசு வேளாண்துறை, தோட்டக் கலைத்துறை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியற்றில் உயர் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர்கள். சிலர் சுய தொழில் முனைவோராகவும்,வேளாண் பல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். 55 பேர் தற்சமயம் இல்லை.
முதல் பட்டதாரிகள் குழுவைசேர்ந்த முருகேச பூபதி வேளாண் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தராவார்.
இச்சங்கமம் நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக பல்கலை செயல் துணை வேந்தர் சுப்ரமணியன் கலந்து கொள்கிறார். இதில், அனுபவங்கள் பரிமாற்றம், கலை நிகழ்ச்சிகள், அறிமுகம், குழு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மேலும், பங்கேற்கும் நபர்களில் இருந்து குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆறுமுகம், பரத்குமார், பாஸ்கரன், செல்வமணி, சுரேஷ்குமார், பழனிவேல்ராஜன், ரத்தினவேல், குரு அரங்கநாதன் ஆகியோர் செய்து வரு கின்றனர்.

