/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, மதுரையில் விரைவில் மின்சார அரசு பஸ்கள் இயக்கம்
/
கோவை, மதுரையில் விரைவில் மின்சார அரசு பஸ்கள் இயக்கம்
கோவை, மதுரையில் விரைவில் மின்சார அரசு பஸ்கள் இயக்கம்
கோவை, மதுரையில் விரைவில் மின்சார அரசு பஸ்கள் இயக்கம்
ADDED : பிப் 20, 2026 06:38 AM
சென்னையில் இயக்கப்படுவது போல, மதுரை, கோவையில் மின்சார பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது, 120 குறைந்த தரைத்தள மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை, 380 வரை உயர்த்தப்பட்டு இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 55 இடங்களில் சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சார பஸ்களின் இயக்கத்தால், நகரங்களில் மாசு கட்டுப்பாடு குறையும் என்பதால், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. டீசல் பஸ்களால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாலும், பராமரிப்பு பணிகளுக்கு அரசு செலவிடும் தொகை அதிகரிப்பதாலும், காஸில் இயங்கும் பஸ்களை, 400 முதல், 450 கி.மீ., வரை வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.
ஆனால், காஸில் இயங்கும் பஸ்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய, ஈரோடில் உள்ள தனியார் நிறுவனத்தின் டெக்னீஷியன்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், விரைவில் அந்தந்த அரசு போக்குவரத்து பணிமனைகளில், டெக்னீஷியன்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த கட்டமாக, மதுரை, கோவையில் மின்சார அரசு பஸ்களை இயக்கவும், அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது.
-நமது நிருபர்-:

