/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேரன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சேரன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 27, 2025 11:14 PM

கோவை; பேரூர் பகுதியில் உள்ள சேரன் கல்வி குழுமத்தின் அங்கமான சேரன் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், 29வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சேரன் கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சினேகா தலைமை வகித்தார்.
அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் கண்ணதாசன், வி.ஜி.எம்., மருத்துவமனை ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன், துளசி பார்மசிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
300 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.சேரன் நர்சிங் கல்லுாரி முதல்வர் மீனாகுமாரி, சேரன் பார்மசி கல்லுாரி முதல்வர் தேவிகா, சேரன் பிசியோதெரபி சிகிச்சைக் கல்லுாரி முதல்வர் அருணா மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.