ADDED : மார் 29, 2026 09:07 PM

கோவை: கே.பி.ஆர்., இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் 13 வது பட்டமளிப்பு நடந்தது.
கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவகத்தின் துணைவேந்தர் காமாட்சி முடாளி பேசுகையில்,''இந்தியா ஏ.ஐ., துறையில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பல துறைகளில் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதால் திறமையான மனிதவளத்துடன் உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது. ஏ.ஐ., துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, திறமையான நிபுணர்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது. ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் இதற்கு ஆதரவாக உள்ளன,'' என்றார்.
விழாவில், 935 மாணவர்கள் இளநிலை பட்டமும், 33 மாணவர்கள் முதுநிலை பட்டமும் பெற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பட்டம் பெற்ற மாணவர்களை கல்லுாயின் முதல்வர் தேவிபிரியா, வாழ்த்து தெரிவித்தார்.
