/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவபாரத் நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
நவபாரத் நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூன் 29, 2025 11:36 PM
அன்னுார்; அன்னுார், நவபாரத் நேஷனல் பள்ளி பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ, மாணவியர் வரவேற்பு நடனம் ஆடினர். பல்வேறு துறைகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், விளையாட்டு துறையில் நான்கு அணிக்கான தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், விடுதி தலைவர்கள், தேசிய மாணவர் படைத்தலைவர்கள், சாரண, சாரணியர் இயக்க தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி சேர்மன் ரகுராமன், பள்ளி அறங்காவலர் நித்தியானந்தம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பேசினர். பள்ளி முதல்வர் சந்திரன் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.