/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., கல்லூரியில் பட்டமளிப்பு; சிறந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

ADDED : ஜூலை 18, 2025 09:52 PM

கோவை; பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியின், கம்ப்யூட்டிங் அண்ட் அலைடு இன்ஜினியரிங் துறைகளுக்கான பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., மருத்துவமனை கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக டில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் பங்கேற்று பேசுகையில், ''உங்கள் வெற்றிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. அதற்குப் பின்னால், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இருப்பினும், உலக சந்தையில் போட்டியிட, தயாரிப்புகளில் நாம் காட்டும் மனப்பான்மையை மாற்ற வேண்டியது அவசியம். இன்ஜினியர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,'' என்றார்.
இதை தொடர்ந்து, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 436 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துறைகளில் சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்,பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.