/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 28, 2024 05:15 AM

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில், 26வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். விழாவில், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி சங்கர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கான அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 530 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் பெற்ற ஐந்து பேருக்கு தங்கப் பதக்கங்களும், சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அறக்கட்டளை இயக்குனர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.