ADDED : மார் 19, 2026 03:24 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை பயின்ற மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
ஜம்மு காஷ்மீர் கிளாஸ்டர் பல்கலை துணை வேந்தர் சந்திரசேகர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ''இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம், உயர்கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்து வருவதுடன், 2050ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்புள்ளது. இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு பக்கபாலமாக இருக்கும்,'' என்றார்.
விழாவில், 809 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி, முதல்வர் வனிதாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
