/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : டிச 29, 2025 06:03 AM

கோவை: காளப்பட்டி, நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடந்தது. சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். அவர் பேசுகையில், ''தங்கள் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்க்க வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொள்வதன் வாயிலாக, வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்,'' என்றார். சுகுணா அறக்கட்டளை செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லுாரியின் இயக்குனர் சேகர், முதல்வர் ராஜ்குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

