/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடக்கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கட்டடக்கலைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : நவ 14, 2024 05:18 AM

கோவை: மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கல்விக் குழும நிறுவனத்தின் கட்டடக்கலை கல்லுாரியின், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, கல்லுாரியின் செயலர் பிரியா ஆகியோர் விழாவிற்கு தலைமை வகித்தனர்.
கல்லுாரியின் ஆண்டறிக்கையை இந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் இயக்குனர் சுரேஷ் பாஸ்கர் வாசித்தார். சிறப்பு விருந்தினர் ஜெயக்குமார் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆர்க்கிடெக்ட் ஜெயக்குமார் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், '' தொழில்நுட்பத்துடன் பல கலை வடிவங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்துவதோடு, எளிமையும், புதுமையும் கலந்து புதியதொரு கட்டட கலையை மாணவர்கள் உருவாக்க வேண்டும்' என்றார்.