/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிசியோதெரபி கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழா
/
பிசியோதெரபி கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழா
ADDED : மார் 18, 2024 12:49 AM

கோவை;ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 127 பேர் பட்டம் பெற்றனர்.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து பேசுகையில், ''ஆர்வம், விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் சிறந்த இயன்முறை மருத்துவராக விளங்க வேண்டும்,'' என்றார்.
திருச்சி எஸ்.ஆர்.எம்.பல்கலை மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் துறை டீன் சிவக்குமார் பட்டங்களை வழங்கி பேசுகையில்,''பட்டதாரிகள் தங்கள் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி முதல்வர் சீதாராமன், பேராசிரியர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

