/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 27, 2024 11:22 PM
கோவை:சரவணம்பட்டி, பி.பி.ஜி., கல்வியியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, பாரதியார் பல்கலையின் பதிவாளர் (பொறுப்பு) முருகவேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ''ஆசிரியர் பணி, அறப்பணிக்கு சமம். வருங்கால சந்ததியினரை உருவாக்கக் கூடிய பொறுப்பு, ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை, சிறந்த மாணவன் மட்டுமின்றி, சிறந்த மனிதனாகவும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், 110 பி.எட்., மற்றும் 76 எம்.எட்., மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைவர் தங்கவேலு, செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் அக் ஷய், முதல்வர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள்பங்கேற்றனர்.