
பெ.நா.பாளையம்:  பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரியில், 20வது பட்டமளிப்பு விழா நடந்தது.
வித்யாலயா செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா வரவேற்றார். பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் சுவாமி காலேசானந்தா பல்கலையின் சிறப்புகள் குறித்து விளக்கினார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேலூர் ராமகிருஷ்ண விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் சுவாமி சர்வோத்மானந்தா பேசினார்.
தொடர்ந்து, விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தரும், உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பொதுச் செயலாளருமான சுவாமி சுவீரானந்தா காணொளியில் ஆசியுரை வழங்கினார். விழாவில், மாற்றுத்திறன் மேலாண்மை மற்றும் சிறப்பு கல்வியியல் புலத்தைச் சேர்ந்த, 159 மாணவ, மாணவியர் பொது மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உடற்கல்வி மற்றும் யோகா பலத்தை சேர்ந்த, 37 மாணவர்களும், வேளாண்மை, ஊரக மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு புலத்தை சேர்ந்த, 113 மாணவர்களும், கம்ப்யூட்டர் அறிவியல் துறையை சேர்ந்த, 9 பேரும் பட்டங்களை பெற்றனர். உடற்கல்வியியல் புல முதன்மைகிரிதரன் நன்றி கூறினர்.

