/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா
/
பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : பிப் 15, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : வேளாண் பல்கலையின், திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககத்தின் பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா, பல்கலை அரங்கில் நடந்தது. கனடா காமன் வெல்த் ஆப் லேர்னிங்( சி.டபிள்யூ.எல்.,) துணைத்தலைவர் வெங்கடராமன் பாலாஜி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், 15 பயிற்சி மையங்களில் படித்த, 706 பேர் பட்டயச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், தமிழ்நாடு வேளாண் இடுபொருள் கூட்டமைப்பின் தலைவர் மோகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

