/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமசபை கூட்டம் துவங்கிய வேகத்தில் நிறைவு
/
கிராமசபை கூட்டம் துவங்கிய வேகத்தில் நிறைவு
ADDED : ஜன 27, 2025 12:49 AM
கோவை; கிராமசபைக்கூட்டங்களில் மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராமசபைக்கூட்டங்கள் துவங்கிய வேகத்திலேயே நிறைவடைந்தது.
கோவை மாநகராட்சி, விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு கோவையிலுள்ள ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று கிராமசபைக்கூட்டம் நடந்தது. மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றினர்.
இது குறித்து ஊராட்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மொத்தம், 228 ஊராட்சிகள் உள்ளன. அதில் 9 ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
இது தவிர கலங்கல், காங்கேயம்பாளையம், கணியூர், அரசூர் ஆகிய நான்கு ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பற்றிய கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.