/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
/
நான்கு ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
ADDED : பிப் 16, 2024 12:10 AM
அன்னூர்:கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களிலும், 228 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஏப். 1 முதல், 2023 மார்ச் 31 வரை நடைபெற்ற பணிகளுக்கு சமூக தணிக்கை துவங்கியுள்ளது.
தணிக்கையாளர்கள் முழுமையாக நான்கு நாட்களாக ஆய்வு செய்துள்ளனர். இந்த அறிக்கையை இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கின்றனர். இன்று காலை 11:00 மணிக்கு அ.மேட்டுப்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, அல்லப்பாளையம், ஆம்போதி ஆகிய நான்கு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் குறித்த தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. நூறு நாள் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையிலான தணிக்கை குழுவினர் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், அக்ரஹார சாமக்குளம் ஊராட்சியில், அக்ரஹார சாமக் குளத்தில் இன்று காலை 11:00 மணிக்கு நடக்கிறது. தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.