/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
/
ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
ADDED : நவ 01, 2025 05:20 AM
பெ.நா.பாளையம்: உள்ளாட்சி தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமையம்பாளையம், வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஆகிய ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடக் கிறது. இதில், கடந்த ஏப்., முதல் அக்., வரை உள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை பொதுமக்களுக்கு படித்துக் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீன் தயாள் உபாத்தியாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் குறித்து ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

