/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திட்டம்
/
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திட்டம்
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திட்டம்
மூதாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திட்டம்
ADDED : நவ 01, 2025 05:20 AM
அன்னுார்: கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய அன்னுார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்தவர் லோகேந்திரன், 33. பைனான்சியர். இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜாய் மெடில்டா, 27. என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார்.
லோகேந்திரனின் பெற்றோர் இறந்து விட்டனர். தாய் வழி பாட்டி மயிலாத்தாள், லோகேந்திரனுடன் வசித்து வந்தார்.
கடந்த 23ம் தேதி கஞ்சப்பள்ளியில் தனது வீட்டில் லோகேந்திரன் துாங்கிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தை மர்ம நபர்கள் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.
இதிலிருந்து தப்பிய லோகேந்திரன் அன்னுார் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், நாகேஷ்,25. என்பவர் லோகேந்திரன் மனைவி ஜாய் மெடில்டாவுடன் சேர்ந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள லோகேந்திரனை கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் அன்னுார் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாளை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து மயிலாத்தாளின் உடல் புதைக்கப்பட்ட கஞ்சப்பள்ளி மயானத்தில் அன்னுார் போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அங்கு புதைக்கப்பட்டுள்ள மயிலாத்தாளின் உடலை தோண்டி எடுத்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வாயிலாக பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக வருவாய்த் துறையினரிடம் அனுமதி கோரியுள்ளனர். மேலும் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக் கவும் திட்டமிட்டுள்ளனர்.

