ADDED : அக் 01, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 10 ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நடக்கும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 10 ஊராட்சிகளிலும், கிராம் சபை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரவு, செலவு கணக்குகள், வருங்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து தாக்கல் செய்யப்படும்.
பொதுமக்களும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் உள்ள சந்தேகங்களையும் கேட்டறிந்து கொள்ளலாம். தங்களின் குறைகளை தெரிவித்துக்கொள்ளலாம்.
எனவே, அந்தந்த ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.