/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
/
10 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்
ADDED : அக் 04, 2024 10:15 PM
அன்னுார் : கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், இன்று (5ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், 2023 ஏப்., 1 முதல், 2024 மார்ச் முடிய நடந்த பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 2016- -17 முதல் 2021--22 வரை கட்டப்பட்ட வீடுகள் குறித்து சமூக தணிக்கை செய்யும் பணி, செப். 2ல் துவங்கியது.
இந்த வாரம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கரியாம்பாளையம் ஊராட்சி; காரமடை ஒன்றியத்தில் இரும்பறை; பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் அசோகபுரம்; சூலூர் ஒன்றியத்தில் காடுவெட்டி பாளையம்; சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜல்லிப்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், கடந்த 30ம் தேதி சமூக தணிக்கை துவங்கியது.
இதையடுத்து, இரண்டு நாட்களாக தணிக்கையாளர்கள், திட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, பணிகளை நேரில் அளவீடு செய்தனர். தொழிலாளர்களின் வேலை அட்டையை பரிசோதித்தனர்.
இன்று (5ம் தேதி) காலை 11:00 மணிக்கு, 10 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று, பணிகள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.