/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணபதியில் பிரம்மாண்டமாக 'ஜுவல் ஒன்' ஷோரூம் திறப்பு
/
கணபதியில் பிரம்மாண்டமாக 'ஜுவல் ஒன்' ஷோரூம் திறப்பு
கணபதியில் பிரம்மாண்டமாக 'ஜுவல் ஒன்' ஷோரூம் திறப்பு
கணபதியில் பிரம்மாண்டமாக 'ஜுவல் ஒன்' ஷோரூம் திறப்பு
ADDED : மே 31, 2025 04:30 AM

கோவை; கோவை - சத்தி சாலை கணபதியில், 'ஜுவல் ஒன்' ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.
மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். ஷோரூமில், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள், கண்கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
'ஜுவல் ஒன்' நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது:
தமிழகத்தின் 14வது மற்றும் கோவையின் 3வது 'ஜுவல் ஒன்' ஷோரூம் இது. வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாமல், நாங்கள் இதுபோன்ற அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியாது.
சிறப்பு சலுகையாக, வாடிக்கையாளர்கள், பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய தங்க நகைகளை வாங்கும் போது, செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வைர நகைகளுக்கு, ஒரு காரட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நாளை (இன்று) வரை மட்டுமே சலுகைகள் வழங்கப்பட உள்ளன. எந்த மாதிரியான நகைகள் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் விரும்புகிறோர்களோ, அதுபோல் நகை செய்து கொடுக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'பப்புவா நியூ கினியா' தேசத்தின் வர்த்தக உயர் ஆணையர் விஷ்ணு பிரபு, எஸ்.என்.எஸ்., கல்விக்குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், 'ஜுவல் ஒன்' இணை நிர்வாக இயக்குனர் சக்தி சீனிவாசன், 'பிராண்ட்' நிர்வாகி ஆன்டனி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.