/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பச்சை நிறமானது தடுப்பணை: நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்
/
பச்சை நிறமானது தடுப்பணை: நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்
பச்சை நிறமானது தடுப்பணை: நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்
பச்சை நிறமானது தடுப்பணை: நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்
ADDED : ஜன 07, 2024 11:02 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே தடுப்பணையில் கழிவுநீர் கலந்ததால், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் செல்லும் வழியில் உள்ள தடுப்பணையில் கழிவு நீர் கலந்து, தடுப்பணை முழுவதும் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ''கோவனூர் மலையடி வாரத்தில் அண்ணன் - தம்பி பள்ளத்தில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர், வெள்ளமெனப் பெருகி கவுண்டம்பாளையம் அருகே வழிந்து ஓடி வருகிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெற, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகளுக்கும், மிகுந்த பயனுடையதாக இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக இந்த தடுப்பணையில் சேர்ந்த நீருடன் அப்பகுதியில் உள்ள கழிவு நீரும் சேர்ந்ததால், தடுப்பணை நீர் மாசுபட்டு பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கழிவு நீரை பள்ளத்தில் விடாமல் தடுக்க, நாயக்கன்பாளையம் ஊராட்சி மற்றும் கூடலுார் நகராட்சி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பணையில் உள்ள நீரால் இப்பகுதியில் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் பாதிக்கும,'' என்றனர்.